பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுமதிக்க முடியாத அவலம்! உலகம் முழுதும் ஒளிருமோர் வெய்யோன் நிலையாக ஒய்வெடுக்க நிச்சயத்து விட்டதைப்போல் உச்சி மலைநீர் உலைநீராய் ஆவதைப்போல் அச்சம் பிறக்கிறது. ஆனந்தம் மாய்கிறது. பூமிவெடிப்பதைப்போல்பொன்வானம் வீழ்வதைப்போல் காமர் அலைகடல் கணப்பொழுதில் வற்றுதல்போல் மின்னல் அரவமென மேனியினைத் தீண்டுதல்போல் கன்னல் கசப்பதுபோல் கண்கள் சுழல்வதுபோல் மயக்கம் வருகிறது. வாழும் இயற்கை இயக்கம் பிறழ்வதைப்போல் எண்ணம் சிதைகிறது. I எங்கும் வெறுமை எங்கெங்கும் கரியபுகை! தொங்கும் தலையையினித் தூக்க முடியாதோ என்று துயர்க்குரல் நாம் எழுப்பக் கேட்காமல் இன்று பறந்துவிட்டான் இந்த மயில்நாட்டை 103 .ெ மீரா கவிதைகள்