பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித குலத்துக்கே மாற்றம்தான்; நெஞ்சம் அனுமதிக்கக் கூடாத அவலம்தான்; அல்லல்தான்! Lł அந்தோ பொழுதே அவனைப் பறித்தாயே! இந்தப் பிழைக்கு இரங்குநீ அழு கதறு திங்கள் முகத்தில்செந் தீயைப் பரப்பிவிட்டு எங்கள்முன் நிற்கின்ற ஈனப் பொழுதே கேள்! நேரு மறையவில்லை! நேரு மறையவில்லை! பாரில் மலரும் பணிரோஜா எல்லாம் அப் புண்ணியனின் பொன்முகத்தைப் பூரித்துச் சித்திரிக்கும்! கண்ணியனின் காதல் கதைசொலும்.அம் மலர்க்கு இனிமேலே 'ரோஜா'வென்றுள்ள பெயர், நீக்கிப் புனிதமுடன் 'நேரு வென்ற புத்தம் புதுப்பெயரை இட்டுப் புகழ்வோம்; இலட்சியன் சீரடியைத் தொட்டு எழுவோம் தொழுது பாரதப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு மறைந்தபோது எழுதியது மீரா கவிதைகள் 0 106