பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.10.10.10.10.10.10.10.10.10.10.10.10.10.10.10. §ಳ್ಳ! )لیسی tLC)LOLC)LC)Lf~)lf~)IC)LC)lf~)|f~\lf~\lúd C\lC\l Cll C) তাUTUাতাUTUTUাতাতাUTCTUাতাত பொதுவுடைமைப் பூ! எங்கே நீ சென்றுவிட்டாய்? எதிர்கா லத்தின் இலட்சியமே இலக்கியமே மடமை என்ற கங்குலினை மிதித்தெழுந்து வந்த தூய கதிர்மணியே! கண்மணியே ஜீவா வெற்றிச் சங்கெடுத்துப் புரட்சியொலி செய்தாய்; பொல்லாச் சாதிவெறிக் கூச்சலிடும் நரிகள் முன்னர் சிங்கம்போல் பாய்ந்திட்டாய்! இன்றோ எங்கள் சித்தத்தைக் கலங்கவைத்தாய்; எங்கே சென்றாய்? பகுத்தறிவுப் பாதையிலே நடந்தாய் உன்றன் பயணத்தில் வெற்றிகண்டாய் காரல் மார்க்சின் பகுத்துண்ணும் தத்துவத்தை மக்கள் நெஞ்சில் பதிவாக்கக் குருதியொடு குருதி யாக்க செகத்திலெங்கும் கோட்டையைப்போல் நிறுத்தி வைக்கச் செயல்புரிந்தாய் சிறைஇருந்தாய் ஏற்றத் தாழ்வைத் தகர்த் தெறிய முற்பட்டாய் இனிமேல் உன்போல் தக்கோன் - சிந்தனைமிக்கோன் காண்ப தெங்கே? 111 0 மீரா கவிதைகள்