பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்னைநான் பழிக்கின்றேன் என்று, சாவே ஒருபோதும் கருதாதே கேட்டி ருந்தால் என்னைநான் கொடுத்திருப்பேன்; அதனை விட்டே ஏன் அந்தத் தேன் உயிரைப் பறித்தாய்? ஓlஓ! மன்னர்தான் கொடுப்பதற்கு முடியும் என்று மறக்காமல் அவர்வாழ்ந்த மனைபு குந்து பொன்னைப்போல் பொருளைப்போல் ஆவி வாங்கிப் புறப்பட்டுப் போனாயோ? சாவே! சொல் சொல் ஏராண்டு வாளாண்டு செழித்தி ருக்கும் இசைச்சீமை சிவகங்கைச் சீமை என்னும் பாராண்டு கொண்டிருந்த வேந்தை நீயோ பரிசாகப் பெற்றுவிட்டாய்; எங்க ளுக்கோ நீராண்டு கொண்டிருக்கும் விழியும், துன்ப நெருப்பாண்டு கொண்டிருக்கும் நெஞ்சும் தந்தாய் ஒராண்டு முடிந்தாலுங் கூட, சாவே உன்கொடிய பரிசையாம் இழக்க வில்லை! பாரி உயிர் கவர்ந்துசென்ற வேளை அந்தப் பறம்பரசன் இளமகளிர் கண்ணிர் மையில் தூரிகையைத் தொட்டெழுதி வைத்துச் சென்ற துயர்ப்படத்தைக் கண்டிருப்பாய்; இல்லை யாசொல்? கூரியகண் உனக்குண்டே - கண்டி ருப்பாய்; கொடுமையினை ஏன்தொடர்ந்தாய் கண்ட பின்னும்? மாரியுடன் போட்டியிடும் எவரையும்நீ மாய்த்துவிடு வாய்போலும் விரைவில், சாவே! மீரா கவிதைகள் 0 116