பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவயதில் மன்னருடல் பேணிக் காத்த செவிலித்தாய் துடிக்கின்றாள்; அதோபார் சாவே! சிறுவயதில் கூடிமகிழ்ந் திருந்த நண்பர் சிந்தைநொந் தழுகின்றார்; அதோபார் சாவே! சிறுவயதில் கல்விதந்த ஆசான் இன்று செயலிழந்து தவிக்கின்றார். அந்தோ சின்னஞ் சிறுவயதில் குழந்தைகளை விட்டு விட்டுச் சிறகடிக்கச் செய்துவிட்டாய் முறையா கூறு? நீவருதல் கூடாதென்றுரைக்க வில்லை நேர்மையுடன் மெதுவாக மந்தை விட்டே ஆ வருதல் போல் வந்தால் வரவேற் போமே! அநியாய மாய் நகரை அழிக்கப் பாயும் தீ வருதல் போல்வந்தாய்; இரக்கம் இன்றிச் சீறிவரும் புயல்போல வந்தாய்; சாவே! நீ வருதல் முதுமையிலே என்றால் நன்று; நெருங்கிவந்தாய் இளமையிலே; நன்றா கூறு? ஈராயி ரம்ஆண்டுத் தமிழ கத்தின் இலக்கியங்கள் சித்திரித்துக் காட்டு கின்ற ஒராயி ரம்மன்னர் உயிர்கு டித்தாய்; ஒருகதிர்போல் ஒருமன்னர் இருந்தார்; நன்றாய் ஆராயாமல்அவரைக் கொன்று விட்டாய்; ஆத்திரம் நீ அடைந்தாலும் அச்சம் இல்லைபேராயிரம் உள்ள அவையில், நீதி பிறழ்ந்துவிட்டாய் நீ என்பேன் இனிமேல் சாவே! 119 0 மீரா கவிதைகள்