பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

筒 信同信 புலமைச் சிங்கம் ஆண்டிருந்த அண்டிரன் போல் மீசை வைத்து அஞ்சியைப்போல் தமிழின்மேல் ஆசை வைத்து நீண்டுயர்ந்த தோள்களிலே வீரம் வைத்து நீள்விழியில் முதிர் இரக்கம் வைத்து, மானம் பூண்டிருந்த கடைச்சங்க மக்கள் வாழ்க்கைப் புகழ்கூறும் இலக்கியத்தை நெஞ்சில் வைத்துப் பாண்டியரின் பதியிருந்தே தமிழ்வ ளர்க்கும் பரந்தாமன் பசுந்தங்கம்! புலமைச் சிங்கம்! எழுத்துள்ள மொழிக்குத்தான் பெருமை உண்டு; இசையுள்ள பாட்டுக்கே இனிமை உண்டு; பழுத்துள்ள மரத்துக்கே கவர்ச்சி உண்டு; பகுத்துண்ணும் நாட்டில்தான் அமைதி உண்டு; அழுத்தமுள்ள மனக்கருத்தைக் கொஞ்சங் கூட அஞ்சாமல் எடுத்துரைக்க வல்ல வர்க்கே முழுமனிதர் என்கின்ற் பட்டம் உண்டு; முதல்மனிதர் பரந்தாமன் இவ்வி தத்தில்! மீரா கவிதைகள் 0 123