பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருக்கொழுந்தின் மணத்தைப்போல், கூந்தல் ஏந்தும் மல்லிகைப்பூ மணத்தைப்போல், வையம் எங்கும் திருக்குறளின் ஒளிபரவ வேண்டு மென்றே தினந்தோறும் பாடுபடும் தொண்டர் நேர்மை உருக்கொண்டே விளங்குகின்ற அறிஞர் சான்றோர் உளந்தெளித்த பாராட்டுப் பன்னீர் பட்டும் செருக்கில்லா திருக்கின்ற கல்விச் சீமான்! செந்தமிழர்க் கிவர் நூல்கள் வைரக் கற்கள்! "நல்லதமிழ் எழுதுதற்கே வழியைச் சொன்னார்; “நாயக்கர் வரலாற்றை அறியச் செய்தார்; வெல்லமெனத் தித்திக்கும் தமிழில், இன்ப வெள்ளமெனப் பாய்கின்ற கவிதை தந்தார்; சொல்ல முதக் கடலுக்குள் மூழ்கச் செய்தே சுகமளிக்கப் பசுமலையின் நாவ லர்தாம் இல்லையென்ற ஏக்கத்தைத் தணிக்கும் வண்ணம் இருக்கின்ற பரந்தாமன் வான்போல் வாழ்க! பைந்தமிழ்க் காவலர் அ.கி. பரந்தாமனார் மணிவிழா மலர் 124 0 மீரா கவிதைகள்