பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திட்டியவன் மனம்வருந்தப் பொறைப்பண் பாட்டைத் தீட்டியவன் நீ! இடியா அன்புக் கோயில் கட்டியவன் நீ! நல்ல அறிவுப் பாதை காட்டியவன் நீ! மான்மா னத்தை உள்ளம் ஒட்டியவன் நீ! ஆடும் பழமைப் பேயை ஒட்டியவன்-தமிழ்பழித்தோர் தலையில் ஓங்கிக் குட்டியவன் நீ! எழுச்சிப் படையை மேலும் கூட்டியவன் நீ உயர்ந்த குறிஞ்சிப் பூநீ! பொதியமலை, சிற்பங்கள் பேசும் மல்லை, புலிக்கொடியோர்க் குரியதஞ்சைக் கோயில், பொன்னி நதி-இவற்றால் கிடைக்கவில்லை இந்தத் தென்றல் நாட்டுக்கு வான்கீர்த்தி; அண்ணா மங்காப் புதியஒளி, புதிய இசை, புதிய வாழ்த்து பூமணம்போல் தினம்கிடைப்பதெல்லாம் உன்னால், அதிசயம் நீ அமுதம்நீ அண்ணா! உன்மேல் ஆனந்தப் பண்ணிசைக்கும்; இனிக்கும் என்நா! கீற்றுமதி போல்நுதலும் மீன்போல் கண்ணும் கிளிமொழியும், அனநடையும் கொண்ட பெண்கள் நூற்றுவரைப் பாடியுள்ளேன்; எதையெல் லாமோ நூதனமாய்ப் பாடியுள்ளேன்; பாடி என்ன? நேற்றுவரை என்கவிதை கவிதை அல்ல; நெஞ்சினிக்க இன்றுன்னைப் பாடி விட்டேன்; காற்று, வரை உள்ளவரை இனிமேல் என்றன் கவிதைவாழும்; அண்ணா கவிஞன் ஆனேன்! சிவகங்கையில் நடந்த எழுச்சி நாளுக்கு அண்ணா வருகை தந்த போது சுற்றறிக்கையாக அச்சிட்டு வழங்கப்பட்டது. கவிதையின் ஒருபகுதி 'தென்னரசு இதழில் வெளிவந்தது. டிசம்பர் 1964 மீரா கவிதைகள் 0 127