பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றலரும் தாமரைப்பூ இதழில் உள்ள அழகினையும் தேனினையும் எடுத்து மாலைத் தென்றல்தோன்றும்பொதிய மலையில் ஓங்கித் திகழ்கின்ற சந்தனத்தில் வைத்துக் கூட்டி ஒன்றாக்கித் திருமணத்தைத் தேனீக் கூட்டம் உருவாக்கும்; இது இயற்கை இதைப்போ லத்தான் தொன்றுதொட்டுத் தமிழ்மரபுத் திருமணத்தில் தூயஉள்ளப் பிணைப்புண்டுசெயற்கை இல்லை! தமிழ்தந்த இலக்கியத்தில் சாதி இல்லை! தாழ்ச்சிஉயர் வென்பதில்லை; பொதுமை உண்டு! தமிழ்தந்த வரலாற்றில் பொய்ம்மை இல்லை; தளைஇல்லை; கறைஇல்லை; வீரம் உண்டு! தமிழ்தந்த பண்பாட்டில் வஞ்சம் இல்லை; தன்னலத்தின் நிழல்இல்லை, ஈரம் உண்டு! தமிழ்தந்த திருமணத்தில் சூழ்ச்சி இல்லை; தரகர்களுக் கிடமில்லை; காதல் உண்டு! பரமக்குடி பேராசிரிர் பாமணி - மணிமொழி திருமண நினைவு மலரில் வெளிவந்தது 2-6-1963 மீரா கவிதைகள் .ெ 129