பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரும்புத் திருவிழா தைத்திருநாள் வருகைபார் தம்பி வெல்லத் தமிழ்உள்ளம் தனில்இன்ப வெள்ளம் சேர்க்கும் மெய்த்திருநாள் மேன்மைபார் அறிவை வாட்டி மெலியவைக்கும் தேவையற்ற பண்டி கைகள் பொய்த்தினிமேல் போய்விடும்பார் வானில் பாயும் புலிச்சின்னப் புகழ்மன்னன் கரிகாலன்றன் கைத்திருவாள் வெளிச்சம்போல் மின்னு கின்ற கதிர்மணியின் குவியல்பார் கரும்பைப் பார்பார்! காடுகளில் நெளிந்தோடும் நதியின் போக்கில் கண்கவரும் கவின்இருக்கும்; பழைய செய்யுள் ஏடுகளில் நாகரிக மேன்மைக் கான எண்ணங்கள் கொலுவிருக்கும்; தூங்கும் செந்தேன் கூடுகளில் இனிப்பெல்லாம் குடியிருக்கும்; - குத்துவிளக் கேற்றிவைக்கும் தமிழர் நாட்டின் வீடுகளில் வீதிகளில் களிப்பி ருக்கும்; விழாக்கோலச் செழிப்பிருக்கும், பார்பார் தம்பி! 132 0 மீரா கவிதைகள்