பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகமாய்க் கற்றாரல்லர்; ஆயினும் அறிஞர்; மக்கள் எதையுமே விளங்கிக் கொள்ள எளிதான ஏற்ற குட்டிக் கதைகளைக் கூறும் ஆற்றல் கைவரப் பெற்ற மேதை! எதிரியைக் கவிழ்க்கப் பேச்சில் எள்ளலை வீசும் சூரர்! அணுச்சக்தி யாலே ஞால அமைதியாம் அனிச்சப் பூவை அணுவள வேனும் வீணாய் அழித்தாரா? காத்தார் உண்மைத் துணிச்சல் இஃதன்றோ யுத்தம் துரது தூ! தொழுநோய் எண்ணம்! மணிச்சிற கடிக்கும் புள்ளாய் மனிதனை வாழ வைத்தார். இருக்கலாம் இன்று; நாளை இறக்கலாம் பதவிக் கட்டில் இருக்காலம் இன்று: நாளை இறங்கலாம்! இருந்த நாளில் சரித்திரம் மதிக்க என்ன சாதித்தாய்? - இதுதான் கேள்வி; குருச்சேவை விடைஎன் பேன் அக் குரு - சேவை போற்று வேன் நான்! I364 மீரா கவிதைகள் .ெ 140