உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதற்காம் இரண்டு வர்க்கம்? உழைக்கும் கரங்கள் ஒன்றாய் உயர்ந்தால் ஒளியின் பாதை தெரியும் ஏய்த்துப் பிழைக்கும் எத்தர் பெருக்கும் வஞ்சப் பேதக் கோட்டை சரியும். இறைவன் படைத்தான் என்றால் ஒழிக எதற்காம் நரகம் சொர்க்கம்? - சீச்சி இறைவன் படைத்தான் என்றால் வெட்கம் எதற்காம் இரண்டு வர்க்கம்? கடலின் அலைகள் கைகோர்த் திசைக்கும் கவிதை கேட்டும் மனிதா, - உன்றன் உடலில் ஒட்டிய உயிரைப் போன்ற ஒற்றுமை மறத்தல் இனிதா? கண்ணில் கருத்தில் கனல்கொண் டால், பின் கயமைக் காடு சாம்பல் - இந்த மண்ணில் மலரும் அன்பு முல்லை; மலரும் இன்ப ஆம்பல்! 1964 மீரா கவிதைகள் 0 14