பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

680-C• •ర>C<C-Ce <C-C980-O84<><C48<C-Cశిఖర<C 。さる。ろさ。さQージ。さぶ。さぶるーぷる。 oo○・○**○-○oo○-○oo○-○**○-○・○・○o*○-○oe○-○ மீசை இருந்தது! ஆல மரத்தின் அடியில் ஒருவன் சிட்டுக் குருவியைச் சீட்டுக் குருவியாய் ஆக்கி ஏதோ அளந்துகொண்டிருந்தான்; 'எதிர்கா லத்தைப் பார்க்கலாம்' என்றுநான் கேட்டகா சளித்தேன் அவனிடம். உடனே கூண்டைத் திறந்தான்; குருவி வந்தது; வந்த குருவி வழக்கப் படியோர் சீட்டை எடுத்துக் கொடுத்துச் சென்றது; அதனை, விரித்துப் படித்தேன். 'விரைவில் நல்ல அம்சமும் செல்வமும் அமையப் பெற்ற, கணவன்.கிடைப்பான், கவலைப் படாதே" என்றச் சீட்டில் எழுதி யிருந்தது! சீட்டைப் போட்டுச் சிரித்தேன்; ஒருகால் மங்கையாய் இந்நேரம் மாறி யிருக்கலாம் என்று நிசமாய் எண்ணிப் பயந்து மீசையைத் தடவிப் பார்த்தேன்! மீசை இருந்தது மிகப் பெரிதாகவே! மலேசிய இதழொ வெளிவந்தது 145 0 மீராக)