பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்க்கும் தலைவரை வாழ்த்துவ தெங்ங்னம்? என்னே அவர்திறன் என்னே இந்தியா என்று புகழ்ந்தார் எங்கள் மன்றத்தில், பாரதம் முழுவதும் பார்த்து அண்மையில் திரும்பி வந்த திருப்பதி சாமி! உடனே, திருப்பதி சாமி திருப்பதி சாமி! அற்புத முறையில் ஆசை பொங்க பற்பல பகர்ந்தாய் பாரதம் பற்றி! என்னென்ன வோவளர்ந் திருப்பது வாய்,நீ எடுத்துக் கூறினாய் எனினும் ஒன்றுகேள்! ஒருபிடி சோறு உண்ணுதற் கின்றி எலியைப் பிடித்து இளையபாரதத்தினர் தின்கின்றார்களாம்! இன்னும்ஒர் ஊரில் புல்லையும் வேரையும் புசிக்கின்றார்களாம்! கல்லையும் பசியால் பல்லால் கடிக்கும் காலம் கூடக் கடுகிவந் திடலாம்; இதுதான் நமது இந்தியா, இல்லையா? இயம்பிடு வாய்நீ என்று கேட்டான் ஆத்திரத் தோடு அய்யாச்சாமி! அடுத்து, திருப்பதி சாமி திருப்பதி சாமி! புலவன் ஒருவன் புனைந்துரைப் பதைப்போல் இந்திய நாட்டின் எழிலைக் காட்டினாய்! நன்று! நன்றுஉன் நாட்டபி மானம்! இன்றைய செய்தி இதழ்படித் தாயா? அருப்புக் கோட்டையில் ஆறுமுகம் என்பவன் 147 0 மீரா கவிதைகள்