பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தறிபார்த்து நெய்ததுணி போன்ற மென்மைத் தத்துவத்தைத் தணல்மேலே வீசு கின்றாய்; வெறிபோர்த்த சதைத்திமிரைக் காட்டு கின்றாய்; வீரத்தைத் தியாகத்தைச் சத்தி யத்தைக் குறிபார்த்துச் சுடுகின்றாய்; சமத்து வத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்றாய்! முள்ளில் லாத நெறிபார்த்து வா என்னும் நல்லோ ரைநீ நெஞ்சினிலே மிதிக்கின்றாய்; இதுவா நீதி? வேடமிட்டுத் தழைப்போரை, ஞானி போல வெளிச்சமிட்டுப் பிழைப்போரைப், பொருள் உடம்பைக் கூடமட்டும் கூடிப்பின் ஒழுக்கம் பற்றிக் கூசாமல் உரைப்போரை, மதுவ ருந்தி ஆடமட்டும் ஆடிப்பின் அருள்பா லிக்க ஆண்டவனை அழைப்போரை எல்லாம் நன்றாய்ச் சாடமட்டும் சாடாமல் தழுவு கின்றாய்; சமுதாய மே! நீதி வழுவுகின்றாய்! காட்டுப்பூ மணம் வீசும் என்றால், இல்லை காகிதப்பூ மணம் வீசும் என்பாய்; வீட்டு மாட்டுப் பால் சுவைகொடுக்கும் என்றால், கள்ளி மரத்தின் பால் சுவைகொடுக்கும் என்பாய்; நல்ல மேட்டுநில மயில்நடனம் நன்றென்றால் நீ மிகநன்று வான்கோழி நடனம் என்பாய்; ஏட்டுக்காய் கறிக்குதவும் என்று வீணாய் எண்ணுகின்றாய்; போலிகளை நம்பு கின்றாய்! 153 0 மீரா கவிதைகள்