பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வேலை இருக்கிறது நிரம்ப...' வேலை இருக்கிறது நிரம்ப என்னை வேகப் படுத்திவிடு தாயே! பசுஞ் சோலை மரத்தின் குளிர்நிழலில் மனஞ் சொக்கவைக் கும்பூ நகையில் அந்தி மாலை மதிய முதனழிலில் - நான் மயங்கிக் கிடந்தேனே நாளும் - ஆ! வேலை இருக்கிறது நிரம்ப என்னை வேகப் படுத்திவிடு தாயே! பள்ளிக்குப் போய்வந்த நாளில் - சின்னப் பட்டங்கள் விட்டுவிளையாடிப் - பல வெள்ளித் திரையில் மினுமினுக்கும் - சில வேட மயமுகங்கள் கண்டு - நான் துள்ளித் திரிந்தேனே யல்லால் - என்ன தூய பணிசெய்தேன் தாயே? - என்றன் உள்ளந் தனிற்கனல் மூட்டி - என்னை ஊருக் குழைத்திடச் செய்வாய்! 157 0 மீரா கவிதைகள்