பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலையை உடைத்திட வேண்டும் - மின்னும் மணியை எடுத்திட வேண்டும் - கடல் அலையில் மிதந்திட வேண்டும் - முத்தை அள்ளிக் கொணர்ந்திட வேண்டும் - காட்டு நிலத்தை உழுதிட வேண்டும் செந் நெற்குவை கண்டிட வேண்டும் - நான் கலையிற் சிறந்திட வேண்டும் - கோடிக் கவிதை படைத்திட வேண்டும்! வேலை இருக்கிறது நிரம்ப என்னை வேகப் படுத்திவிடு தாயே! - கொடும் பாலை வனத்தினைப் போலே - நான் பாழ்பட்டிருந்தது போதும் வீரப் பாலைப் கொடுத்திடு வாயே - வெற்றிப் பாக்கியம் நீதரு வாயே - அதி காலைக் கதிரவன் போலே - முகங் காட்ட அருள்புரி தாயே! தலைப்பு அண்ணா தந்தது நா.பா.வின்'தீபம்’ இதழில் வெளிவந்தது. 1964 159 ) மீரா கவிதைகள்