பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணம் ஒன்றும் இல்லாமல் குறிக்கோளைக் கொல்லாமல் கொல்வோ ருக்கும் பணம்ஒன்றே வாழ்வென்று பசிகொண்டு வெறிகொண்டு பாழா வோர்க்கும் பிணம்என்று பெயர்சூட்டு! பெரியதொரு குழியிலிட்டுப் பின்தா லாட்டு! மனம்ஒன்றே கைலாயம் மதிஒன்றே பரம்பொருள்; நீ மகிழ்ந்து போற்று நீதிக்கும் நேர்மைக்கும் நிலையான கொள்கைக்கும் நிதமும் தூய்மை சாதிக்கும் கரத்துக்கும் சனநாய கச்செங்கோல் தந்தி டாமல் சாதிக்கும் பணத்துக்கும் தந்துதடு மாறுவோர்முன் சன்மார்க் கத்தைப் போதிக்கும் ஆசானாய்ப் புறப்படு நீ புகட்டிடுநீ, புத்தி தோழா j964 163 .ெ மீரா கவிதைகள்