பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலம் யாருக்கு?

உதிர்காலம் இனிமேலே யாருக்கு? - நெஞ்சம் ஒட்டை அடைந்து பிறர் தேட்டைக் கவர்ந்து பிழைப்பாருக்கு - வரும் எதிர்காலம் இனிமேலே யாருக்கு? - கையால் ஏரைப் பிடித்து - நெற்றி நீரைச் சிந்தி உழைப்பாருக்கு! சிறைச்சாலை இனிமேலே யாருக்கு? - பொருள் தேக்கிப் புதைத்துச் - சிறு பாக்கி பறித்து வதைப்பாருக்கு - தூய அறச்சாலை இனிமேலே யாருக்கு? - யாவும் ஆக்கிக் கொடுத்துத் துயர் போக்கி அருளை விதைப்பாருக்கு. பிணமாலை இனிமேலே யாருக்கு? கதை பேசிக் களித்து மடப் பாசி பிடித்துக் கிடப்பாருக்கு - புகழ் மணிமாலை இனிமேலே யாருக்கு? - சோம்பல் மாற்றிப் பறந்து - வினை யாற்றித் துணிந்து நடப்பாருக்கு. மீரா கவிதைகள் 0 164 1963