பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

তাতাতাUTCTUাতাত |ို႔ႏွ႔ႏွ } Ç ) & (Υ (Τ): (ΤΥ ! Ο ΙΩ) (Υ (ΤΥΙ (ΤΥ (ΤΥ (Υ (ΤΥ (Υ ΥΥ. (Υ ΙΩ 夏雳Q卯J UTUTUFUTUTUTUTUTUFU ) - & முருகனும் முத்தையா பிள்ளையும் பட்டை பட்டையாயப் பழனி விபூதியை நெற்றியில் பூசி நெஞ்சில் பூசி செவியில் பூவைச் செருகிப் பூசை அறையை விட்டே அசைந்து வருகையில் முத்தையா பிள்ளை 'முருகா!' என்றார். உடனே அவர்முன் ஓடோடி வந்து 'என்ன எசமான் கூப்பிட் டீர்களா?' என்று கேட்டான் ஏவ வாளான்; முத்தையா பிள்ளையின் முகமோ சிவந்தது! 'விடியா மூஞ்சிப் பயலே விடிந்ததும் பாவம் படர்ந்தஉன் முகத்தைப் பார்க்கவா காட்டித் தொலைக்கிறாய்; கழுதையே! சனியனே! அப்பன் முருகனை அல்லவா அழைத்தேன்! உன்னையா அழைத்தேன், உதவாக் கரையே’ என்றார். சென்றான் ஏவ லாளன் 165 ) மீரா கவிதைகள் 1963