பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

다. தலைவா ழைஇலை தன்னில் பரப்பிய பலவிதக் காய்கறிப் படைய லோடு நெல்லூர் அரிசிச் சோற்றில், நல்லூர் நெய்யை ஊற்றிக் கையால் பிசைந்தே உண்டெழுந் தருளி உதரம் தடவி எண்ணிக்கை யற்ற ஏப்பம் இசைத்தே ஒய்வு காண உல்லாச மாகச் சாய்வு நாற் காலியில் திருமேனி சாய்க்கையில் முத்தையா பிள்ளை 'முருகா!' என்றார். உடனே அவர்முன் ஒடோடி வந்து 'என்ன எசமான் கூப்பிட் டீர்களா?” என்று கேட்டான் ஏவ லாளன்; முத்தையா பிள்ளையின் முகமோ எரிந்தது! "அழுகை மூஞ்சிப் பயலே! நல்ல நாளும் பொழுதுமாய் நாயே, என்முன் பட்டினி படர்ந்த உன் முகத்தை ஏனடா காட்டித் தொலைக்கிறாய்? கழுதையே! சனியனே! அப்பன் முருகனை அல்லவா அழைத்தேன்! உன்னையா அழைத்தேன், உதவாக் கரையே?’’ என்றார். சென்றான் ஏவலாளன். 口 - உச்சி இரவு; ஒருமணி இருக்கும். 'முருகா! முருகா! முருகா!' என்று பிள்ளைவாள் மாடியில் பெருங்குரல் எழுப்பினார். கொல்லையில் அந்தக் குரல் எதி ரொலிக்கவே ஏவ லாளன் எழுந்தான்; பின்னர் மீரா கவிதைகள் 0 166