பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'என்னையா கூப்பிட்டார்; இருக்கா(து) என்றவன் உள்ளே போகாமல் உடம்பைச் சாய்த்தான்! கொஞ்சநேரத்தில் கோபத் தோடு மடமட வென்றே மாடியை விட்டுப் பிள்ளைவாள் வந்தார் கொல்லையை நோக்கி; இனிதாய்த் தூங்கிய ஏவ லாளனைத் தட்டி எழுப்பினார்; திட்டி எழுப்பினார். 'ஏனடா பேயனே இளிச்ச வாயனே! திருட்டுப் பயல்கள் செல்வத்தை எல்லாம் சுருட்டிக் தொண்டு போகையில் உன்னைக் கூப்பிட் டேனே! குரல் கொடுத் தேனே! ஓடிவந் தாயா ஓசையைக் கேட்டு? தின்று கொழுத்துத் தினமும் தூங்கவா தண்டச் சோறு? தடியனே!' என்றார். முத்தையா பிள்ளை. 'ஐயையோ நமது சொத்தையா திருடர் சூறை யாடினார்? எசமான்! தாங்கள் முருகா என்றது காதில் விழுந்தது கணிரென நான் எழுந்(து) ஒடி வரத்தான் எண்ணினேன்; ஆனால் என்னையா கூப்பிடப் போகின்றீர்கள்? அப்பன் முருகனை அல்லவா நீங்கள் அழைத்திருப் பீர்கள் அழைத்திருப் பீர்கள்! என்று பேசா திருந்தேன்' என்றந்த ஏழை முருகன் இயம்பினான்! சாவிக் கொத்தை ஆவியாய்க் கொண்ட முத்தையா பிள்ளையின் முகம்இருண் டதுவே! 1963 167 ) மீரா கவிதைகள்