பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதிரிகள் குப்பைப் பொருள்களாய்ப் போவார். உறுதியும் துணிவும் உள்ளத்தில் பெறாதோர் இறுதியில் அரசியல் அனாதையாய்ச் சாவார். நாமோ, குருதியில் பூத்த கொள்கை மலர்கள்; சுருதியில் விடுதலை சொல்லும் யாழ்கள்; கிழக்குத் திசையில் கிளம்பும் ஒளிகள்; வழக்கிரண் டுடைய பழந்தொகைப் பாடல்கள்; சிங்க நோக்குச் சேரலாதன்கள்; பங்கம் போக்கும் நெடுஞ்செழியன்கள்; தியாக பூமியின் சின்னச் சாமிகள்; நியாயம் தூய்மை நேர்மை வாய்மை கடமை உரிமை கண்ணியம் எனும்பல உடைமை திரட்டும் உயர்பெரும் செல்வர்கள்! எனவே, மண்ணும் மதியும் மன்னும் பரிதியும் விண்ணும் மலையும் விரிந்த கடலும் இருக்கும் வரைக்கும் இனிதாய் இருக்கும்:வளரும் நம் இலட்சிய ஏடே! திராவிடன் 1964 மீரா கவிதைகள் 0 182