பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனர் வாழ்க! முகலாயப் பேரரசின் புகழை வானில் முட்ட வைக்க ஒட்டி வைக்கத் திட்ட மிட்ட முகலாய மாமன்னர் - சீர்தி ருத்த முன்னோடி - அக்பர்.இக் கங்கை நாட்டார் அகத்தினிலே ஒற்றுமையை ஏற்ப டுத்த அரும்பாடு பட்டதுண்டு; பட்டும், வெட்டும் நகவிளிம்பு அளவேனும் பயன்கா ணாமல் நைந்ததுண்டு; மனம் வருந்தி மாண்டதுண்டு! அரியாசனச்சண்டை இந்தி யாவில் ஆரம்ப மானதினம் தொடங்கி, மக்கள் நரியாக ஊளையிட்டும், வெறிபி டித்த நாயாகக் குரைத்திட்டும் வாழ்ந்த தெல்லாம் சரியாகத் தெரிந்தஒன்று, சரித்தி ரத்தில் சான்றுண்டு; (அ) சோகமண்ணில் ஒற்று மைதான் புரியாத புதிராக, இன்னும் சொன்னால் பொய்யாகக் கனவாகப் போன துண்டு! 183 0 மீரா கவிதைகள்