பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளுக்கோர் வழிசெல்வதாலே, நாடு அநியாய மாய்அழிந்து போகக் கூடும்; தேளுக்குத் தன்கையை நீட்டும் சின்னஞ் சிறுவன்போல் பெருந்தேசம் ஆகக் கூடும்; வாளுக்கும் வேலுக்கும் வேலை தந்த மறவரினம் பிரிவினையால் சிதறித் தீமைத் தாளுக்குப் பணிந்திடவும் கூடும் என்று தனிக்கவலை பண்டிதரும் கொண்ட துண்டு. பாண்டவர்கள் பிளவின்றிப் பெற்ற அந்தப் பாஞ்சாலி ஒற்றுமையைத் துணைக்கண் டத்தில் ஆண்டவன்தான் உண்டாக்க வேண்டும் என்று அவனிடத்தில் வரங்கேட்ட பக்தர் உண்டு! ஆண்டவனுக் கனுதாபம் பிறந்தி ருக்கும்; அடியேன்நான் நினைக்கின்றேன்! இல்லாவிட்டால் நீண்டநெடு நாட்களுக்குப் பிறகு இந்த நிலப் பக்கம் சீனர்களை அனுப்பு வாரா? கன்பூஸ்யஸ் நாட்டார்கள் இமயத் தின்கண் கால்வைத்த புண்ணியத்தால் இங்கெல் லாரும் 'என்தேசம்' 'என் எல்லை' என்று பேசும் எழுச்சியினைக் காண்கின்றோம்; கர்ணன் போலப் பொன்பொருளை அள்ளியள்ளித் கொடுப்பதற்கும் புத்துணர்ச்சி கொண்டுள்ளோம்; திண்ணைச்சோற்றுச் சன்யாசி யும்கூட நாட்டுப் பற்றுச் சம்சாரம் நடத்தவரும் நிலைகாண் கின்றோம், 185 0 மீரா கவிதைகள்