பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பாட்டின் கோயில்கள் நீங்கள் சோழப் பத்தினிக்குச் சிலைவைத்துப் போற்றி என்றும் கண்போலக் காத்தீர்கள் கற்பை; அந்தக் கற்பைஓர் கடைவீதிப் பொருளாய் மக்கள் எண்ணச்செய் யும்கதைகள் பெருக விட்டே இருப்பதுவோ இருட்குகையில்? தமிழ்வி ளக்கை மண்வீட்டில் எரியவிட்ட காலம் போதும்; மலைமேட்டில் ஏற்றுங்கள்; புகழ்ஈட்டுங்கள்! அள்ளக்கை குறையாத செல்வத் திற்கே அதிபதிகள், நிதி பதிகள் நீங்கள்! இன்று பள்ளத்தில் நிற்கின்ற கேட்டை எண்ணிப் பாருங்கள்; தடையுடைத்துப் பொங்கிப் பாயும் வெள்ளத்தின் வேகத்தைப் போல்எ ழுந்து வீறுகொண்டு புறப்படுங்கள்; அநீதி யாவும் உள்ளத்தின் எழுச்சிக்கே உணவாய் ஆகும்; ஒற்றுமைப்பண் பாடுங்கள்; புகழ் ஈட்டுங்கள்! மன்றம் 19–2-61 மீரா கவிதைகள் 0 188