பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை மீரா - ஒரு நேர்காணல் “மீராகாற்று. ஓரிடத்தில் நிற்க மாட்டார். அவரை என் வீட்டில் மூன்று மணி நேரம் அடைத்து வைத்து உரையாடினேன். அதிலிருந்து சில பகுதிகள்.' - அப்துல் ரகுமான் எப்போது கவிதை எழுதத் தொடங்கினீர்கள்? அதற்கான தூண்டுதலாக இருந்தது எது ? அல்லது யார்? பள்ளிக்கூட நாட்களிலிருந்தே எனக்கு திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு இருந்தது. அண்ணா, பாரதிதாசன், கண்ணதாசன், மு.வ. ஆகியோரின் எழுத்துக்கள் என்னை எழுதத் தூண்டின. கல்லூரி நாட்களில் சுரதா, தாகூர், கலீல் ஜிப்ரானில் ஈடுபாடு ஏற்பட்டது. என் முதல் கவிதை 'தீபக் குன்றம் பாரதி பற்றியது. அது 1959இல் தாமரையில் வெளிவந்தது. அது மரபுக் கவிதை. எண்சீர் விருத்தம். பாரதிதாசன் பாதிப்பு அதில் தெரியும். அறிஞர் அண்ணா உங்கள் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை அறிவேன். அவரோடு எப்படி அறிமுகம் ஆனிர்கள்? 'திராவிட நாடு', 'திராவிடன்', 'முரசொலி’, ‘தென்றல்’, இன முழக்கம்', 'மன்றம், இதழ்களில் என் கவிதைகள் வெளிவந்துகொண்டிருந்தன. எல்லாம் அரசியல் 190