பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். வேழவேந்தன் கவிதைத் தொ வெளியீட்டு விழாவில் பேசும்போது 'ள் ಣ್ಣಿ நினைக்கிறேன். திராவிட இயக்கக் கவிஞர்கள் என்று அண்ணா சிலர் பெயர்களைப் பட்டியலிட்டார். அதில் 'மீ.இராசேந்திரன் என்று ஒருவர் என்று கடைசியாக என் பெயரைக் குறிப்பிட்டார். "தெருவோரச் சாக்கடையில் வருமாதெப்பம் என்ற என்வரியை இருமுறை மேற்கோள் காட்டி எழுதி இருக்கிறார். 'பொங்கல் கொண்டாட வேண்டும் என்று கூறும் என்னுடைய மற்றொரு கவிதையையும் குறிப்பிட்டிருக்கிறார். திருச்சியில் நடந்த தி.மு.க மாநாட்டுக்குத் தொண்டர்களை அழைத்து எழுதிய கடிதத்தில், சாவா சந்திப்போம்; வாழ்க்கை நமக்கென்ன, பூவா புறப்படுவோம்; புல்லியரைத் தூள் செய்வோம்’ என்ற என் கவிதைவரியை எடுத்துக்காட்டி எழுதியிருக்கிறார். ஒரு முறை நேரில் சந்திக்க முயன்றேன். முடியாமல் போய்விட்டது. கலைஞரோடு எந்த அளவில் தொடர்பு? 'முரசொலி"யில் கவிதை எழுதியிருக்கிறேன். 'கலைஞர் தலைமையில் கவியரங்கத்தில் பாடியிருக்கிறேன். ஆசிரியர் போராட்டத்தின்போது அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். எனக்கு வேறு இடத்தில்(பல்கலைக் கழகத்தில்) வேலைக்காகத் துணைவேந்தராக இருந்த மு.வ. விடம் பரிந்துரைத்திருக்கிறார். 1983இல் மதுரை எட்வர்ட் ஹாலில் பாரதி நூற்றாண்டு விழாக் கவியரங்கம். அப்போது எனக்குப் பொதுவுடைமைக் கோட்பாட்டுச் சார்பு ஏற்பட்டிருந்தது. கலைஞர் பேச வந்திருந்தார். நீ லெனினைப் போல் புரட்சித் தலைவனாக வேண்டும்: என்று பாடினேன். கலைஞர் பேசும்போது தான் போனதுமல்லாமல் என்னையும் தூக்கிக்கொண்டு போகப் பார்க்கிறார். அவர் எங்கள் வண்டலில் விளைந்த பயிர் என்பதில் பெருமைப்படுகிறேன். அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்’ என்று வாழ்த்தினார். 'வாகை மாறன் என்னும் பெயரில். 191