பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.மு.க.வில் இவ்வளவு தீவிரமாக இருந்த நீங்கள் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் எப்படிப் போனிர்கள்? - தி.மு.க உணர்வோடு இருந்தபோதே பொது வுடைமைக் கோட்பாட்டையும் நான் விரும்பினேன். 'ஜனசக்தி படிப்பேன். பேராசிரியர் தர்மராஜன் தொடர்பால் நான் மார்க்சியத்தின் பக்கம் போகத் தொடங்கினேன். மேலும் தி.மு.க திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது எனக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தி எதிர்ப்புப் போன்றவற்றில் ஏற்படுத்திக் கொண்ட சமரசம் இவையெல்லாம் சேர்ந்து என்னைப் பொதுவுடைமைப் பக்கம் தள்ளிவிட்டன. புதுக்கவிதை எழுதத் தொடங்கியது எப்போது. எதனால்? கல்லூரி நாட்களிலேயே தாகூர் கவிதைகளை வி.ஆர்.எம். செட்டியார் மொழிபெயர்ப்பில் படித்தபோது வசன கவிதை என்னை ஈர்த்தது. டி.எஸ்.எலியட் வேஸ்ட் லேண்டும் படித்தேன். முற்றிலும் புரியவில்லை என்றாலும் அந்தப் புதுமைப் போக்குப் பிடித்திருந்தது. தாகூர் காதல் பரிசின் பாதிப்பில் 1959 இல் காதல் கனி' என்ற வசன கவிதை எழுதினேன். இதுவே என் முதல் வசன கவிதை முயற்சி. தொடக்கத்தில் புதுக்கவிதையை வெறுத்த பொதுவுடைமையர் திரு.தி.க.சி. தாமரைப் பொறுப்பேற்று (1970) வசன கவிதையை ஆதரித்த பிறகு, அதன் பக்கம் திரும்பினர். கைலாசபதியும் புதுக்கவிதை பற்றிய தம் வெறுப்பை மாற்றிக் கொண்டிருந்தார். "வானம்பாடி’யும் வந்தது. இந்தக் காலக் கட்டத்தில் தான் முதலில் 'கனவுகள் + கற்பனைகள்- காகிதங்கள், பிறகு 'ஊசிகள் எழுதினேன். முற்போக்குத் திறனாய்வாளர்கள் பொதுவாகவே பெண்ணைப் பற்றி, காதலைப் பற்றி எழுதினால்