பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடியதோர் உள்ளத்தைக் கொலை செய்; இதோவாள் கயமையைக் கைதுசெய், கடுந்தண்டனை கொடு! எல்லாம் எனக்கே என்பதினிமேல் எத்தர் ஏய்ப்புரை இழிசினர் வழக்கு முதலாளித்துவமுதுகெலும்பைமுறி பாடுபடுவோர்க்கே பாரெனப் பாடு சமத்துவச்சங்கொலி செய்து சமைத்திடு தம்பி புதியதோர்தரணியே' என்கிறார். சமுதாயத்தில் ஏற்றமும் தாழ்வும் ஏணியும் கேணியும். மேடும் பள்ளமும் இருப்பின் அதைத் தகர்த்தெறி, புறப்படு என்ற உணர்ச்சியை எழுப்பும் இக் கவித்துளியை எப்படி மறப்பது? போதும். இனிமை காண இருதுளிகள் போதும். இப்போது, உங்களைக் கேட்கிறேன்? இவ்வெள்ளம் கங்கைப் பெருக்கா? காவிரி வெள்ளமா? பூவிரி பொருநையின் புதுப் புனல் நீரா? நீங்களே சொல்லுங்கள்! 17.10, 1965 தங்கள் சிவகங்கை நா.இலக்குமணப்பெருமாள் 18