பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியிட்டேன். இதே போல் பேராசிரியர் அருணன் நூல்களையும் வெளியிட்டேன். தோழர் எஸ்.ஏ.பி. என்னிடத்தில் பிரியமாக இருப்பவர். 1963 இல் எழுதிய பொங்கல் கவிதை ஒன்றை செம்மலர் பொங்கல் சிறப்பிதழில் வெளியிட அனுப்பியிருந்தேன். அதை 2002இல் நடுப்பக்கத்தில் எழில் ததும்ப வெளியிட்டிருந் தார்கள். 100 ரூபாய் அன்பளிப்புத் தொகை வந்தது. தோழர் எஸ்.ஏ.பி.யிடம் தொலைபேசியில் பேசினேன். இந்த நான்கு ஆண்டுகளில் ஓய்வூதியம் தவிர எனக்குக் கிடைத்த வருமானம் இந்த நூறு ரூபாய்தான் என்று சொன்னேன். எனக்கு எதற்கு அனுப்ப வேண்டும் என்றேன். 'செம்மலர் இப்போது வளர்ந்து விட்டது என்று சொன்னார்.எனக்கு, மகிழ்ச்சியாக இருந்தது. - Ο நான்கைந்து முறை வட நாட்டுக்குப் போயிருக்கிறேன். (வெளிநாட்டுக்குப் போனதில்லை) நான் போன எல்லா மாநிலங்களிலுமே பஞ்சமும் பட்டினியும் தலை விரித்தாடின. சாக்கடையருகில் ஆயிரக்கணக்கில் ஏழைக் குடிசைகள். பிச்சைக்குக் கையேந்தித் திரியும் சிறுவர் சிறுமியர்கள், உழைத்துத் தேய்ந்து உருக்குலைந்து நடைபாதையில் படுத்திருக்கும் தொழிலாளர்கள். வடக்கில் நான் கண்ட பல காட்சிகள் என்னை நோகச் செய்தன. வடக்கு வாழ்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தது தவறு தானோ என்று எனக்குப் பட்டது. India offers Unity in divertsity argårms alsårógsås aviflá; arqpg|ugj Gurū. India offers Unity in poverty grairms எனக்குச் சொல்லத் தோன்றியது. அங்கங்கே செல்வந்தர்கள் விரல் எண்ணிக்கையிலும் ஏழைகள் மயிர் எண்ணிக்கையிலும் இருப்பது புரிந்தது. அண்ணா திராவிட நாட்டைக் கைவிட்டது சரிதான் என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். 'அந்தக் கவிதை பாட்டாளித் திருநாள் என்ற தலைப்பில் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. 3}