பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுவுடைமை ஒன்றுதான் விழோசனம் என்று தீர்மானித்தேன். ஒரு நல்ல இந்தியத் தமிழனாகவும் அதே நேரத்தில் உலகக்குடிமகனாகவும் (Citizen of the World) வாழ விருப்பப்பட்டேன். Q இப்படித்தான் நான் பொதுவுடைமைப் பக்கம் போக நேர்ந்தது. போனாலுங்கூட திராவிட இயக்கத்தின், தி.மு.கவின் மாறாது. அடிப்படையான கொள்கைகளி லிருந்து விலகாமல், நான் ஆணி அடித்தது போல் அசையாமல் இருந்தேன். தேர்தல் காலங்களில் எனக்குச் சோதனை வரும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்ஸிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து கலைஞருடன் கட்டணி அமைக்கும் செய்தியைப் படிக்கும் போது நிம்மதிப் பெருமூச்சு விடுவேன். மாறாக நடக்கும் போது இரண்டு பெண்டாட்டிக்காரன் படும் அவதிக்கு ஆளாகி விடுவேன். C) என் அரசியல் வாழ்க்கையை, போராட்ட வாழ்க்கையை விரிவாகச் சொல்ல இங்கே இடமில்லை. பள்ளிக்குச் சேர்ந்து போகும் அண்ணன் தம்பி போல் சின்ன வயதிலிருந்தே தி.மு.க கொள்கைகளிலும் பொதுவுடைமைத் தத்துவத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தேன். இதனை அறுபதுகளில் வெளிவந்த இந்தத் தொகுப்பைப் படிக்கும் வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அண்ணாவைப் பாடிய நான் ஜீவாவையும் பாடினேன். பொங்கலைப் போற்றியது போல மே தினத்தையும் கொண்டாடியுள்ளேன். என் சுருக்கமான அரசியல் பின்புலம் இவ்வளவுதான். © முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கலைஞர் என்னை அறிவார். என்றாலும் அவருக்கும் எனக்கும் பெரிய 32