பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருக்கம் இல்லை. தூர இருந்தே அவரையும் பேராசிரியரையும் மதிப்பவன் நான். தி.மு.க. ஆட்சிக்கு வருமுன்னும் வந்த பின்னும் ஆறேழு கவியரங்குகளில் கலைஞர் தலைமையில் பாடியுள்ளேன். நான் திசைமாறிய பறவை'யான பிறகு என்னை எதற்கும் அழைப்பதில்லை. அண்ணா கவியரங்கம், கலைஞர் கவியரங்கங்களில் நான் கலந்து கொண்டதில்லை. கலைஞர் கையால் எந்த விருதும் பெற்றதில்லை. பாவேந்தர் விருது கூட ஆளுநர் ஆட்சியில்தான் கிடைத்தது. எனக்கும் கவிஞர் சிற்பிக்கும் பாவலர்மணி பழனிக்கும் கவிஞர் நீலமணிக்கும் இன்னும் ஏழெட்டுப் பேருக்கும் இரவலர்களைப் போல் எங்களை வரச்சொல்லி ஆளுநர் பாவேந்தர் விருதுகளை வாரி வழங்கினார். கலைஞர் விருதுகள் தராவிட்டாலும் நான் பொதுவுடைமைப் பக்கம் போய் விட்டது தான் காரணம் என்று நினைக்கவில்லை. அவருக்கு என்மீது கோபமோ வருத்தமோ இல்லை. மாறாக வாழ்த்தவே செய்தார். ‘எங்கள் வண்டலில் விளைந்த பயிர் மீரா. எங்கிருந்தாலும் வாழ்க’ என்று மதுரையில் ஒரு கூட்டத்தில் பேசும்போது அண்ணாவைப் போல பெருந்தன்மையுடன் வாழ்த்தினார். அவரைப் பற்றி ஒரு முறை கவி’ இதழில் வேடிக்கையாக எழுதியதைத் தவிர நான் விமர்சனம் செய்ததில்லை. தமிழினத்தின் மூத்த தலைவர் என்ற எண்ணம் எப்போதும் அவரை வணங்கச் செய்யும். கலைஞர் தனிப்பட்ட முறையில் எனக்கு உதவியதை நான் மறப்பதில்லை. அதைவிடக் கல்லூரிப் போர்க் களத்தில் 'ஒடிந்த வாளுமின்றி நின்ற அபிமன்யுபோல் இருந்த என்னையும் ஆசிரியர் இனத்தையும் காப்பாற்றினார். நானும் பேராசிரியரின் இளவல் அண்ணன் திருமாறனும் இரண்டு மூன்று முறை சென்று அவரைச்சந்தித்து முறையிட்டபோது மோசமாக நிர்வாகம் செய்யப்பட்ட சிவகங்கை மன்னர் கல்லூரியை அரசு