பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் மீரா, ஒரு குறிஞ்சி மலர்; அவர்தரும் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு குறிஞ்சி மலர்! உலகில் பலவகை மலர்கள் உண்டு. அன்றன்று பூத்து, அன்றன்று உலர்பவை; வண்ணநிற ஆடம்பரங் காட்டுபவை, உள்மணம் அற்றவை - இன்னும் பலப்பல -- எத்தனை எத்தனையோ வகை மலர்கள் இயற்கைதானே! மீரா பலரை உருவாக்கியவர்; அம்முயற்சியில் தன்னை 'உருவாக்கிக்கொள்ள மறந்தவர். மீராவின் பாடல்களில், கவித்துவ ஒளிக்கீற்றுகள் பலப்பல உள. ஆனால் அவரோ மற்றவர்களின் ஒளிச்சேர்க்கையில், தனது நிறத்தை இணைத்துக் கொண்டவர். தன்னை இழக்கத் துணிந்தவர். மின்னுவதைச் சிலபோது மறந்துவிடும் விண்மீன், அவர்! ஒளிக்கீற்றைத் தன்னுள்ளேயே அடக்கிக் கொண்ட கார்காலக் கதிரவன் அவர்! அடிக்கடி பூக்காது அரிதாய்ப் பூக்கும் குறிஞ்சிப் பூவும் அவர்! 口 இதோ உங்கள் முன் தேடித் தொகுத்துக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இப்பாமலர்களில் பெரும்பான்மை யானவை, இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் பூத்தவை. இன்றும் என்றும் புலராது, யாணர்நாட் செல்லுகினும், நின்று புலர்ந்து, தேன்பிலிற்றும் நீர்மையவை பலவுள. மீராவின் மரபுவழிப் பாடல்கள் இவை. இவற்றில் சந்தம் தழுவியவை சில. எண்சீர் விருத்தத்தில் அன்றே இவர் பல வடிவமைப்புச் சோதனைகள் செய்து பார்த்துள்ளார். சங்க இலக்கிய மணம் உண்டு, பாரதியின் தாக்கமுண்டு, பாரதிதாசனின் பரம்பரை முத்திரையும் உண்டு; அம் மரபு வளர்ச்சியில் அவற்றை மிஞ்ச முயலும் தனித்திறன்களும் பலவுண்டு, மீராவின் பாடல்களில்! காதலைப் பாடும்போது இவர் பிறரினும் தனிமைப் படுகிறார். அதில் இவர் இறையைத் தழுவும் உயிர்போலும்