பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிபிடித்த அல்லியினைத் திங்கள் தீண்டும் விதம்பிடித்த மானதென்றும் கிள்ளை பேசும் மொழிபிடித்த மானதென்றும் நளினமான முயல்பிடித்த மானதென்றும் குறள்நூல் காட்டும் வழிபிடித்த மானதென்றும் திருக்குற் றால வளம்பிடித்த மானதென்றும் சொன்னா யாமே.... குழிபிடித்த யானையைப்போல் ஆனேன்; காதற் குறிபிடித்த எனைப்பிடிக்க வில்லை யாசொல்? நகைபிடித்த மானதென்றும் மழலை சிந்தும் நகைபிடித்த மானதென்றும் காஞ்சிப் பட்டு வகைபிடித்த மானதென்றும் நெய்யில் சுட்ட வடைபிடித்த மானதென்றும் வெள்ளை முல்லை முகைபிடித்த மானதென்றும் அந்தி மங்கை முகம்பிடித்த மானதென்றும் சொன்னா யாமே.... புகைபிடித்த ஓவியம்போல் ஆனேன்; காதற் புதிர்பிடித்த எனைப்பிடிக்க வில்லை யாசொல்? தமிழ்நாடு 30-9-62 மீரா கவிதைகள் 0 79