பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊனாக, உயிராக, உறக்க மாக, உள்ளத்துக் குளத்துக்குள் நீந்து கின்ற மீனாக, மேனியினைச் சிலிர்க்க வைக்கும் மென்தென்றற் காற்றாகக் குறிஞ்சிப் பூவின் தேனாகக், குறுந்தொகைப் பாட லாகத், தென்னாட்டுக் கலையாகத் திகழும் அத்தான், நானாக நான் இல்லை! நீங்கள் இன்னும் நளனாகப் பிரிந்திருத்தல் நல்ல தில்லை! இங்கெனக்குக் கிடைத்திருக்கும் துணையோ வாட்டும் ஏக்கம்தான்; மயக்கம்தான்; ஏதோ எண்ணித் திங்களுக்குத் திங்களொரு கடிதம் தீட்டித் தேறுதலும் ஆறுதலும் கூறு கின்ற உங்களுக்குத் தெரியாத தொன்று மில்லை; ஒருவார்த்தை இருந்தாலும்..... நெருங்கும் இந்தப் பொங்கலுக்குள் வராவிட்டால் அருவிக் கண்ணிர்ப் பொங்கலுக்குள் உயிர்புதைத்துக் கொள்வேன்; அத்தான்! 'தமிழ்நாடு' தேதி தெரியவில்லை 95 0 மீரா கவிதைகள்