பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே சென்றான்? தளிருருவம் ஒளிகாட்டும் பருவம்; என்றன் தாய்இடுப்பை விட்டிறங்கி ஊர்ந்து திண்ணை வெளியோரம் நடைபோடும் வேளை, நானும் விளையாடத் துனைவரவா என்று கேட்டுக் குளிரோடை விழியாலே பார்த்தான் கள்வன்! குருதியெலாம் கொதிப்பேற ஆடி மாத வளியாக ஆனேன் நான்; அவனோ என்னை வட்டமிடும் பட்டமென வளைந்து வந்தான்! அரும்புருவம் எழில்காட்டும் பருவம்; மாலை ஆனவுடன் பள்ளிவிட்டே இல்லம் நோக்கித் திரும்பிநெடுஞ் சாலைவரும் வேளை, நானும் சேர்ந்துதுணையாய்வரவா எனமு திர்ந்த கரும்பினிப்பைக் கசக்கவைத்த சொல்லால் கேட்டான்! கடுகடுத்துக் கண்துடித்துக் கோபத் தாலே நெருப்பாடும் விளக்கானேன்; அவனோ என்னை நீங்காத விட்டிலென நெருங்கி வந்தான்! மீரா கவிதைகள் 96