பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

函圈 XGনত A_\(o J李C/)〉 颗兹 நாளைக்கும் நான் வருவேன்! என்றோஒர் நாள் பார்த்தேன்! ரவிவர் மாவும் எழுதமுடி யாஅந்த ஒவி யத்தை என்றோஒர் நாள் பார்த்தேன் இளங்கோ கூட எழுதமுடி யா அந்தக் காவி யத்தை என்றோஓர் நாள் பார்த்தேன்! அன்று நெஞ்சை இனிக்கவைத்தாள்; சிலிர்க்கவைத்தாள்; இசைக்க வைத்தாள்; இன்றோஎன் இளமையினைக் கருக வைத்தாள் எங்கோ போய் மறைந்தென்னை உருக வைத்தாள்! இதோ இந்தச் சோலையில்தான்பார்த்தேன்! பார்த்தேன்! இதோ இந்தப் புன்னைமரங் கூடச் சாட்சி! இதோஇன்று வீசுகின்ற தென்றல் அந்நாள் எங்களுடல் தீண்டியதை மறந்தா விட்டேன்? இதோஇந்தக் குயிற்கூட்டம் அன்று பெய்த இசைக்காதல் அமுதத்தை மறந்தா விட்டேன்? இதோவருவேன்' எனச் சொல்லிப் போவ தைப்போல் எனைப்பார்த்துப் போனாளே.... மறப்பே னாநான்? மீராகவிதைகள் 98