பக்கம்:முகவரிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





முன்னுரைக்காக இந்த நூல் இன்னும் தவம் கிடப்பது நியாயமல்ல என்று ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ ஆசிரியர் திரு.இந்திரன் ஒடோடி வந்து அருள் பாலித்துள்ளார்.

அவர் என் பெயர்க்காரர்; அதனால்தான் இத்தனைப் பரிவும் பாசமும் பாராட்டும்!

நான் அவருக்கு ஏதாவது செய்யவேண்டும்.

இன்று முதல் அவர் ஏகபோகமாய் ‘இந்திரன்' என்ற பெயரை ஆண்டு அனுபவிக்கட்டும். இனி ‘இந்திரன் 1’ என்று நான் குறுக்கே வரமாட்டேன். இது சத்தியம்.

மீரா
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/10&oldid=969280" இலிருந்து மீள்விக்கப்பட்டது