பக்கம்:முகவரிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 'அவளைக் காப்பாற்றுவது
    என்ற லட்சியமெல்லாம்
    எனக்கில்லை.
    என்னையே நான்
    காப்பாற்றிக் கொள்ள
    அவள் வேண்டும்'


எவ்வளவு திடமாக-தீர்மானமாகத் தன் உள்ளத்தைத் திறந்து காட்டுகிறான்.


'எரிகின்ற விளக்கைப் பழம் என்றும் எண்ணி விட்டில் விளக்கில் விழுமே, அது மாதிரி...' என்று யாரும் அவனிடம் பீடிகை போட்டுப் பேச முடியாது.


   'அந்த அங்க லாவண்யமே
    ஒரு தீக்கொழுந்து
    அதில்
    சிறகுகள் கரிய
    சிற்றுடல் எரிய
    அதன் மயமாகும்
    ஈசல் நான் -


பேசப் பிறகு என்ன இருக்கிறது?'

என்று நிமிர்ந்து நிற்கிறான் - ஒரு கூரிய வாள் போல். நமக்கும் பேசப் பிறகு என்ன இருக்கிறது?

ஆனாலும் அவன்-

ஈசலாகித் தீசலாகப் பொசுங்கிப் போய்விடாமல் புடம் போட்ட பொன்னாய் - உறுதி மிக்க உருக்காய் மாறுகிறான்.

   'எமன் வீட்டு வாசலையும்
    உனக்காகத் தட்டுவேன்'

100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/101&oldid=970657" இலிருந்து மீள்விக்கப்பட்டது