பக்கம்:முகவரிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று கூறும் அவன் அவளுக்காகத் தன் வீட்டுக் கதவைத் திறக்கிறான். அவனும் அவளும் அலையும் அலையுமாய்.. சொர்க்கம் அவர்களைச் சுற்றி வருகிறது.

நீசச்சமூகம் விடுமா?

அவள் அவனுக்காக வீரமரணம் அடைகிறாள்.

அவன் - அவள் மரித்த பிறகும் வாழ்கிறான்.

அவளுக்காக - அவளைப் போன்ற ஆயிரம் பாவப்பட்ட பெண்களுக்காக - அவர்களுக்கு விடிவுகாண... மூடச் சமூகத்தின் முடைநாற்றம் போக்கி ஒரு முடிவு காண...


மயக்கங்களில் எரிந்து கரிந்து புகைந்து போகாமல் விமோசனம் தேடும் இயக்கங்களில் சங்கமித்து நிற்கிறான். ஒரு நெருப்புச் சுடல்போல!



மெளனமயக்கங்களின் கதை பழைய கதைதான். பழக்கப் பட்ட - பலரும் தொட்ட கதைதான்.


எனினும் இந்தக் கதையில் நின்றுகொண்டு கவிதைக் கரம் நீட்டி யாரும் தொடாத மலைமுகடுகளைத் தொட்டிருக்கிறார் சிற்பி.


சிற்பியின் 'அவள்' சிலப்பதிகார மாதவிதான். சிலப்பதிகாரத்தில் மாதவியின் விரகதாபம் விவரிக்கப்பட்ட அளவு சமுதாய நிர்ப்பந்தங்களுக்கு ஆளான அவள் வேதனைகள், அடிமனத்துயரங்கள், ஆழமான வடுக்கள் வெளிக்காட்டப் படவில்லை.


   'என்ன கவி இந்த
    இளங்கோ உரைத்த கவி'

101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/102&oldid=970658" இலிருந்து மீள்விக்கப்பட்டது