பக்கம்:முகவரிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று மாதவிக்காகக் கண்ணதாசன் செல்லமாகக் கோபித்துக் கொண்டதுகூட சரியாகவே படுகிறது.


கண்ணதாசன் இப்போதிருந்தால் மாதவியின் மனக் குமுறல் சிற்பியின் அவள் மூலம் வெளிப்பட்டிருப்பதைப் பார்த்து ஆறுதல் அடைந்திருப்பார்.


மாதவியின் தாய் சித்ராபதி எப்படி அந்த அந்திக் கடை திறக்கத் துணிந்தாள்?

   'அம்மா நகைகளை விற்றாள்
    அப்புறம் காய்கறி விற்றாள்.
    தலையில் சுமந்து விறகு விற்றாள்
    பிறகு
    கற்பை விற்றாள்
    எங்களுக்குக்
    கால் வயிறு நிரம்பியது'


என்று சிற்பியின் வார்த்தைகளால் சுடும்போது சித்ராபதி யுங்கூட முதலில் கஜானா நிரம்ப அல்ல கால் வயிறு நிரம்பவே கடை திறந்திருப்பாள் என்று தெரிகிறது. முதல் நாள் போருக்கு நாயகனை அனுப்பி, போனவன் வராமல் புகழ்க் காவிய நாயகன் ஆனதறிந்து மறுநாள் நெற்றியில் திலகமிட்டு வெற்றியுடன் திரும்பி வா என்று மகனை அனுப்பிய வீரத்தாய் போல முன்னமே சோரம்போனதாய் இரவுச் சந்தைக்கு மகளை அனுப்புகிறாள்.


இது சிலப்பதிகாரம் முதல் சிற்பியின் காலம்வரை மாதவிகள் வளர்ந்த கதை...


இந்த மாதவிகள் தங்கள் பூர்வாசிரமப் பெயரைக் கூடச் சாமான்யமாகச் சொல்ல மாட்டார்கள் - சாமியார்களைப் போல!

102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/103&oldid=970659" இலிருந்து மீள்விக்கப்பட்டது