பக்கம்:முகவரிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதுரையில் ஒரு பெயராம்! காஞ்சியில் ஒரு பெயராம்! காசியில் ஒரு பெயராம்!

தெய்வநிலைக்கு உயர்த்திக் காட்டுவதைப்போல் அவர் களைக் கேவலப்படுத்திய சமூகத்தின் முகத்திரையைக் கிழித்துக் காட்டுகிறார் சிற்பி.

   'இந்த வியாபார சமூகத்தில்
    நீ விற்பனைப் பொருளானதில்
    ஆச்சரியமில்லை '

என்று சமூகத்தின் தடித்த தோலில் சாட்டையை வீசுகிறார் சிற்பி.



ப்போதெல்லாம் 'நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால் நன்றாம்' என்று சொல்வதுகூட நாகரிகக் குறைவு என்று நினைக்கிறார்கள் சில மெத்தப் படித்த மேதாவிகள்.

காதலா... அது ஆகப் பழைய விஷயம்... அலுத்துப் போன விவகாரம் என்று முகஞ்சுளிக்கிறார்கள் சில விவேக சூடாமணிகள்.

காதல் ஆகப் பழையதுதான். எனினும் அன்றன்று புதுமையாய் மணங்கமழ்வது - ஒரு மலரைப் போல!

காதல் மிகமிகப் பழையதுதான். ஆனாலும் என்றென்றும் உயிர் இயக்கும் ஆற்றல் உடையது - காற்றைப் போல!

சிற்பிக்கு இந்த உண்மை தெரியும்...

எவ்வளவு ஆனந்தமாய் அந்த ஆதிகாலத்து ஒரிஜினல் நெய்மிட்டாயைச் சுவைக்கிறார்... சுவைக்க கொடுக்கிறார்...

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/104&oldid=970660" இலிருந்து மீள்விக்கப்பட்டது