இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதல் தான் சொர்க்கத்தை பூமிக்கும் கொண்டுவரும் மந்திரம்.
சிற்பிக்கு இந்த ரகசியம் தெரியும்.
எவ்வளவு சுகமாய்ச் சொல்லுகிறார்...
"மனித சுவாசங்களில்
இத்தனை சுகந்தமா?
வியர்வையில் இத்தனை நறுமணமா?
ஓ
சொர்க்கம்
பூமியில்தான் பூமியில்தான்!"
காதலிக்கவும் உழைக்கவும் முடிந்தால் தான் ஒருவன் நல்வாழ்க்கை நடத்த முடியும் என்கிறார் மகான் டால்ஸ்டாய்.
"காதலிப்பதற்காக உழைப்பு
உழைப்புக்காகக் காதல்"
என்ற அவரது மணிவாசகம் என்னைக் காந்தமாய்க் கவர்ந்திருக்க வேண்டும். அதன் பாதிப்பாலோ என்னவோ
"நீ எனக்குக் காதலை தந்தாய்
அது உழைப்பாளியின் வியர்வையைப் போல்
உயர்வானது"
என்று 'கனவுகளில்' எழுதியிருக்கிறேன்.
"இது தர்ம சங்கடமான சிக்கல். இதை அவர் காதலியும் ஏற்றுக் கொள்ளமாட்டாள்; உழைப்பாளியும் ஏற்றுக்
105