பக்கம்:முகவரிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத்திலிருந்தே சாமிநாதனை சங்கடப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கும்போது நாங்கள் என்ன செய்வது?

பட்டினப்பாலைக் காதலில் கரிகாலன் நுழையும்போது சிற்பியின் பட்டணப்பாலைக் காதலில் ஒரு காம்ரேட் புகக்கூடாதா?


உணர்வு தடுமாறும் என் கடைசி நாட்களிலும்கூட அந்த உயிரோவியம் செல்மாவையும் அந்த லெபனான் தேசத்துத் தேவகவி கிப்ரானையும் என்னால் மறக்க முடியாது.

கிப்ரானின் முறிந்த சிறகுகளைப்போல் என் தாய்மொழி யில் ஒரு வசன காவியத்தை அமரகாவியத்தைப் படைக்க வேண்டும் என்று பல நாட்கள் பரபரத்திருக்கிறேன்... ஒருநாள் ஆசையாய்ப் படைத்தும் பார்த்தேன்.

இதோ... சிற்பி ஊனுருக உயிருருக 'மெளன மயக்கங் களை'ப் படைத்துவிட்டார்...

சிற்பி ஜெயித்துவிட்டார்...

நான்....

இன்னொரு 'ரவுண்டு' ஆடவேண்டும்!


22.6.1982

107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/108&oldid=969400" இலிருந்து மீள்விக்கப்பட்டது