பக்கம்:முகவரிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



   'ரியன் அல்லேன்
    என்னும் போதில்
    எத்தனை மகிழ்ச்சி
    எத்தனை மகிழ்ச்சி’
    என்கிறார் புரட்சிக் கவிஞர்,
    திருவிடத்தில் தமிழகத்தில்
    உருவெடுத்ததற்காக
    உள்ளங் குளிர்கிறார்.

    கா.கா
    புதுக்கவிஞர் என்றாலும்
    புரட்சிக்கவிஞர் வழிக் கவிஞர்;
    தமிழ் வாழ்க என்று பேசும் கிளிக்கவிஞர்:
    அதனால் தான்
    'தமிழனாகப் பிறந்ததற்காகப்
    பெருமைப்படுகிறார்!
    அது மட்டுமல்ல,
    வடநாட்டில்
    வங்கத்திலோ மும்பையிலோ
    உத்திரப்பிரதேசத்திலோ
    மத்திய பிரதேசத்திலோ
    இல்லை
    இலங்கையிலோ இங்கிலாந்திலோ
    அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ
    'ஏதோ ஒர் இடத்தில் தமிழனாய்ப் பிறக்காமல்
    தமிழகத்தில் தமிழனாய்ப்
    பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்
    என்கிறார்.
    இந்தப் பற்று, தாய்மண் மற்று
    எந்தத் தமிழனுக்கும் இருக்க வேண்டும்;
    புதுக்கவிஞர் சிலர்
    தரைமட்டம் ஆக்கிப் பார்க்கும் தமிழை

109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/110&oldid=970665" இலிருந்து மீள்விக்கப்பட்டது