உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'புதியதிசை வழி' என்று நான் சொல்வது வேறொன்று மில்லை; மக்களுக்காக இலக்கியம்; மக்களால் இலக்கியம்; மக்களைக் கொண்டு இலக்கியம் என்பது தான். சிறுகதை என்னும் வடிவத்தில் கவிஞர் இன்குலாப் அந்தப் பணியைப் 'பாலையில் ஒரு சுனை' என்னும் இத்தொகுப்பின் மூலம் மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்பது வரலாற்றுப்பூர்வமாகக் கண்டுகொள்ள் வேண்டிய முக்கியமான செய்தியாகும்.

முழுவதும் முழுவதும் அரசியலாய்ச் சில: முழுவதும் முழுவதும் மனிதாபிமானச் சித்தரிப்புக்களாய்ச்சில; இரண்டும் கலந்து சில - இப்படிப் பன்னிரண்டு சிறுகதை களும், ஒரு குறுநாவலுமாக இத்தொகுப்பு அமைந் துள்ளது. அனைத்துக் கதைகளும் நடை, உடை பாவனை களில் மக்கள் இலக்கியமாகவே அமைந்துள்ள தன்மை கவனிப்பதற்கு உரியது. கண்களைத் திறந்து, கருத்தோடு இசைந்து இந்த மண்ணைப் பார்க்க விரும்பும் எந்த ஒரு வாசகனுக்கும் இந்தக் கதைகள், பாத்திரங்கள், வருணனைப் பின்னணிகள் ஆகிய அனைத்தும் அந்நிய மானவை அல்ல. மக்களைக் கொண்டு மக்களுக்கான இலக்கியம் என்ற கொள்கை இந்தக் கதைகளின் மூலம் சாத்தியமாகியிருக்கிறது.

இன்குலாப் சின்னஞ்சிறு வயதில் கிராமத்துச் சூழ்நிலை யில் சந்திக்க நேர்ந்த சமூக அடக்குமுறையிலிருந்து, இன்று இடதுசாரி சிந்தனையாளராக வளர்ந்து மாநிலத்தின் தலைநகரில் வாழ்ந்து அரசின் அடக்குமுறைகளைத் தினந்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கும் அனுபவங்கள் வரை அனைத்தும் இந்தக் கதைகளில் பதிவு செய்யப் பட்டுள்ளன; இந்தப் பதிவாக்கமே மக்களுக்கான இலக்கியம் என்பதைப் பூரணத்துவப்படுத்தியிருக்கிறது; இது இந்த தொகுதியின் மிக உன்னதமான அம்சம்.

114

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/115&oldid=969410" இலிருந்து மீள்விக்கப்பட்டது