பக்கம்:முகவரிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுவே வேலையாப் போச்சு, சார்! இதெல்லாம் சரிப் படணும்னா ராணுவ ஆட்சி வரனும், சார்' என்பார்கள்.

ஒரு மைல் நடப்பதற்கே முணுமுணுப்பவர்கள் ஐயப்பன் பேரால், பழனியாண்டவன் பேரால் மைல் கணக்கில் நடப்பார்கள். கேட்டால் அது நேர்த்திக் கடனாம்! ஆனால் 'பாலையில் ஒரு சுனை' சிறுகதையில் வரும் கமருக்கும் அவள் பிள்ளைகளுக்கும் மணல் காட்டில், வெயில் வேளையில், பேருந்து வராத அந்தத் தருணத்தில் நடப்ப தற்கு எந்த நேர்த்திக் கடனும் காரணமல்ல; கமருக்கு ஏற்பட்ட இளையவயதின் மலர்ச்சிதான், பழைய நினைவுகளில் பாய்ந்து வந்த புத்துணர்ச்சிதான் காரணம்.

நகரத்தில் நல்ல சூழ்நிலையில்கூட ஒருவர்க்கொருவர் உதவ முன்வரமாட்டார்கள். 'இந்த வேணாவெயில்லே! ஏன் நடந்து போlங்க. அடி பாதகத்தி மக்களா' என்று அழைத்து, தான் அணிந்திருந்த செருப்புகளை அந்தக் கிராமத்துப் பெரியம்மா கழற்றிக் கொடுக்கும்போது பாலையிலே ஒரு சுனை என்ன - ஒரு சோலை (Casis)யே வந்துவிட்டதாகத்தானே கமருக்குத் தோன்றும்.


பிரெஞ்சுப் புரட்சியின்போது புரட்சிக்கு எதிரானவர்களை 'கில்லட்டினில்' வைத்துக் கொன்ற காட்சிகளை அடிக்கடி பார்த்துப் பாரிஸ் மக்கள் உணர்ச்சியற்றுப் போனதை, தாமஸ் கார்லைல் (Thomas Carlyle) பிரெஞ்சுப் புரட்சி பற்றிய தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். கில்லட்டி னில் மனிதர்கள் கொல்லப்படுகிறபோது, பாரிஸ் நகாப்


1வேகாத வெயிலிலே வெம்பரந்த கானலிலே' என்பது இராமநாத புரத்தில் ஒரு மரபுத் தொடர். ..

116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/117&oldid=969412" இலிருந்து மீள்விக்கப்பட்டது