பக்கம்:முகவரிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண்கள் அதைப் பார்த்துக் கொண்டே 'எம்பிராய்ட்' பின்னிக் கொண்டிருந்தனராம். சமூக அவலங்களைப் பார்த்துப் பார்த்து, மரத்துப் போய் பிறருக்கு உதவ முன் வராத நகரத்து மாந்தரைப் போலவே, வர வர கிராமத்து மக்களும் ஆகி, உதவ முன்வராதது மட்டுமல்ல அகப்பட்டதைச் சுருட்டும் அளவுக்கு சுயநலமிகளாகவும் மாறி விட்ட சூழ்நிலையைச் சொல்கிறது 'விபத்து' சிறுகதை.

அங்கும் இங்குமாய் நடக்கும் சாலை விபத்துக்கள், மற்றும் வேறுபிற விபத்துக்கள் பற்றியும் பேசி அலுத்துப்போகும் நபர்கள் அல்லது எழுதி எழுதி மாய்ந்து போகும் பத்திரிகைகள், 'விபத்துக் கேஸ்"களுக்கு மட்டுமே ஆஜராகி நஷ்டஈடு வாங்கிக் கொடுத்துக் காலங்கழிக்கும் இடைத்தரகர்கள் - இப்படி இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சமுதாயத்தில் இன்குலாப், தேசத்திற்கே விளைந்து கொண்டிருக்கும் சேதம் மிகுந்த 'விபத்து' பற்றி இக்கதையில் விவாதிக்கிறார். சவூதிப் பணமும் துபாய்ப் பணமும் நமது நாட்டுக் கிராமங்களுக்குள்ளே நுழைய நேர்ந்ததும், அந்தப் பொருளாதார 'வளர்ச்சி'யின் காரணமாகக் கிராமத்து மனிதர்கள் தங்களிது மனித மாண்புகளையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு வெறும் ஜடங்களாக ஆகிப்போய்விட்டிருப்பதும் இந்த தேசத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிற ஒரு மெளனமான 'விபத்து' அல்லவா' என்று கேட்கிறார்! கதைக்கு 'விபத்து' என்றே பெயரிட்டிருந்தாலும் இது சமூகத்தில் ஆண் பெண், சாதி, இனம் என்றெல்லாம் பாராமல் அனைவரையும் பற்றிப் பரவிக் கொண்டிருக்கும் 'நோய்' என்றும் சுட்டிக் காட்டுகிறார்.

'சின்ன வானத்தில்'- என்ற கதையையும் ஏறத்தாழ இந்த 'விபத்து' வரிசையில் வைத்தே விவாதிக்கலாம். 'திரைப்படம்' ஏற்படுத்திய விபத்து பற்றியும் அவ்விபத்து எவ்வாறு

117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/118&oldid=970846" இலிருந்து மீள்விக்கப்பட்டது