'மக்களுக்கான இலக்கியம் என்னும் கொள்கையுடைய இன்குலாப் இத்தொகுப்புக் கதைகளின் வழியே சில முக்கியமான கருத்துக்களை விவாதிக்கிறார். 'பொருளா தாரம் மாற்றம் அடையும்போது மாறுகின்ற மனித உறவுகள்; ஒரு கம்யூனிஸ்ட்டின் பணி எங்கிருந்து தொடங்கப்பட வேண்டும்; அரசு என்பதான அடக்கு முறைக் கருவியின் செயல்பாடுகள்; மனித இதயங்களை உடைத்தெறிந்து சின்னாபின்னப் படுத்துவதில் மதம்' ஆற்றிவரும் மகத்தான பங்கு - ஆகியவை இத்தொகுதிக் கதைகள் வழியே பேசப்படுகின்றன. 'Non Fiction' என்று சொல்லப்படுகின்ற 'புனை கதை அல்லாத இலக்கிய வகைக்குள் விவாதிக்கப்பட வேண்டிய மிகவும் முக்கிய மான விஷயங்கள் இங்கு 'Fiction' என்ற சிறுகதை வடிவத் திற்குள் விவாதிக்கப்படுகின்றன என்பது இப்போது எழுதுகிறவர்களும், இனி எழுதப்போகிறவர்களும் கவனிக்க வேண்டிய வியக்கத்தக்க அம்சம் ஆகும்.
இடையில் கவிஞர் இன்குலாப் கதைகளில் சுட்டிக்காட்டும் ஒருசில குறிப்புகள் நினைப்பதற்கும் விவாதிப்பதற்கும் உரியன.
இந்திய இடதுசாரி இயக்கம் இன்றுவரை அளித்துள்ள பங்களிப்பு சாதாரணமானது அல்ல; இருப்பினும் ஒர் ஒப்பீட்டு நோக்கில் பார்க்கும்போது ஒரடி முன்னேறி, மூவடி சறுக்கிய கதையாக இருப்பதையும் மறுப்பதற் கில்லை. அதற்கான காரணம் இடதுசாரி இயக்கச் சிந்தனை யாளர் சிலர் 'புரட்சி' என்பது ஏதோ ஆகாயத்தில், அல்லது மேடைகளில், தெருவில், சாலையில் மட்டுமே இருக்கிறது என்று நினைத்து, தாங்கள் இருக்கும் வீட்டையும், வீட்டில் உள்ளவர்களையும் மறந்து திரிந்தலைவதுதான் என்று சுட்டிக்காட்டுகிறார் இன்குலாப். இயக்கத்தில் பணி யாற்றும் தோழன் ஒருவன், தன் இல்லத்தில் செய்ய
119